தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!
Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசனின் புகழுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா கட்சிக்கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் ரவீந்திரன்
இன்று காலை (22) உறவுகளையும் தோழமைகளையும் தான் நேசித்த மக்களையும் விட்டு பிரிந்து இயற்கை எய்தினார்.
அன்னாரது புகழுடல் பூநாரி மடத்தடி, சபாபதி வீதி, கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்ற செயலளர் நாயகம் அமரரின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
அத்துடன் மூத்த தோழரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களும் தமது இறுதி அஞ்சலுயை மறைந்த தோழருக்கு செலுத்தியிருந்தனர்.
மறைந்த தோழமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
Related posts:
|
|
|


