கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் – மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, June 15th, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சியில் போலி வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் அரைகுறை திட்டங்களுடன் கைவிடப்பட்டவர்களுக்கும் கரம் கொடுத்து, சிறந்த வாழ்வியல் அமைத்து கொடுக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மானிப்பாயில் நடைபெற்ற கட்சியின் மானிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பிரதேசங்களின் வட்டார செயற்பாட்டாளர்கள்  மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவரர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டிருந்த கடந்த கால ஆட்சியின்போது, வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு முழுமையான நிதி வழங்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய நிலையில் செயற்றிட்ட உதவியாளர்களாக நாடளாவிய ரீதியில் சுமார் 7200 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு கூட்டமைப்பினால் சுமார்  1500 பேர் வடக்கு கிழக்கு பகுதியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால் குறித்த நியமனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் இரத்து செய்யப்படும் என்பதை தெரிந்து கொண்டே கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் நோக்கங்களுக்காக வழங்கியிருந்தனர். இவ்வாறு பல்வேறு வழிகளில் மக்கள் கடந்த கால ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் பாதிக்கப்பட்டவர்கள் எமது அப்பாவி மக்கள் என்ற அடிப்படையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எமது கரங்கள் பலப்படுத்தப்படுமாக இருந்தால் அவர்களுக்கு ஏமாற்றப்பட்ட விடயங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு சிறந்த வாழ்வியல் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: