தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு – இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசாயிகள் கோரக்கை!
Friday, April 16th, 2021வலிகாமம் மேற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கில் அண்மைய நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த எள்ளு பயிர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதுடன் குறித்த பாதிப்புக்கான இழப்பீட்டை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த ஆண்டு கடும்மழை காரணமாக பெரும்போக நெற் செய்கை பாதிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் விவசாயிகள் எள்ளு, உழுந்து, பயறு என உப உணவு பயிர்ச் செய்கைகளில் இம்முறை ஈடுபட்டனர்.
இவ்வாறு எள்ளு பயிர் செய்கையில் இம்முறை ஈடுபட்ட வலி. மேற்கு , வலி. தென்மேற்கு விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை தரக்கூடிய நிலை விளைச்சல் காணப்பட்டது. அண்மைய நாள்களாக பெய்துவரும் கடும் மழையால் உப உணவுச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நட்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பதாக நெற் செய்கையால் நட்டமடைந்த குறித்த பகுதி நெற் செய்கையாளர்கள், விவசாயக் காப்புறுதிக்கு விண்ணப்பித்து சில மாதங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் அந்தப் இழப்பிடு கிடைக்காத நிலையில். மேலும் ஒரு நட்டத்தை குறித்த விவசாயிகள் எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் தொடர்ந்தும் இவ்வாறான தாக்கத்தை தம்மால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளமையால் இதற்கான இழப்பீட்டை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருமாறும் அமைச்சரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அண்மை நாள்களாக பெய்துவரும் கன மழை காரணமாக புகையிலை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் தமது புகையிலையின் அறுவடைக் காலத்தின் போதும் அதன் விற்பனையின் போதும் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் புகையிலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|