கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் படகுகளை பதிவு செய்வதில் காணப்படும் அசௌகரியங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் தொடர்பு கொண்டு, நாடடிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மீன்பிடிப் படகுகளை தயாரிப்பதில் காணப்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

Related posts: