எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Monday, May 30th, 2022

ஆழ் கடல் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எரிபொருள் விலையேற்றத்தினால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

எரிபொருளின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதனால், திட்டமிட்ட முறையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்

இலங்கையில் சுமார் 6500 ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 4500 கலன்கள் தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.

அவற்றில் சுமார் 2000 கலன்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை  ஈட்டுகின்ற ஏற்றுமதிக்கான மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: