எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. – தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை கணேஸ் இந்துகாதேவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், ” வாழ்வாதார சவால்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் பயிற்சி பெற்று,  சர்வதேச தரத்திலான போட்டிகளில் சாதிப்பது சாதாரண விடயமல்ல.

இவ்வாறான எமது ஆளுமைகள், சரியான முறையில் வழிப்படுத்தபட்டு வளர்க்கப்பட வேண்டியவர்கள்.

கடந்த கால அழிவுகளும அவலங்களும் மாத்திரமே எமது அடையாளங்களாக இருந்து வருகின்ற நிலையில், இவ்வாறான திறமையாளர்கள் எமக்கு புதிய முகவரியை வழங்குவதற்காக உருவாகி வருவது நம்பிக்கையளிக்கிறது.

இவ்வாறானவர்களுக்கு எனது ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் நேற்று(18.01.2022)  இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப் பிரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: