அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து – வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Friday, June 11th, 2021

வடக்கு கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று வடக்குக் கடலில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது, கடலுயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில், பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில்  மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேருந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை ஏற்றிய சாயுரு எனும் கடற்படைக் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அண...