எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, September 4th, 2018

நினைவுத்தூபி தொடர்பில் நான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை இந்தச் சபைக்கு கொண்டு வந்திருந்தேன். அதாவது, கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தேன்.

அதனை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் அந்த நினைவுத்தூபி அமைவிடம் தொடர்பில் எமக்கு இணக்கம் இல்லை. மேற்படி நினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இருந்தும் அன்று நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பில் இந்த அரசு ஏற்றுக் கொண்டாலும், இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமானதொரு ஏற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுடன்,

இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு உடனடி அவதானத்தை செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் தொடர்பான விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: