உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி இணைப்பு)

2017 டிசம்பர் 28 ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்ட உதயன் செய்திப் பத்திரிக்கையில் “யானை வந்ததற்காக ஈ.பி.டி.பியின் முறைப்பாடு” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை பிரசுரித்து எங்கள் கட்சிக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் முறையாக கெட்ட எண்ணத்துடன் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தி பிரசுரிக்கப்பட்டமையால் யாழ்ப்பாண பிரதேசத்தில் மக்கள் மத்தியில் எமது கட்சிக்கு எதிரான வெறுப்புணர்வு தோற்றுவிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக ஒரு விசாரனையை மேற்கொண்டு அப்பத்திரிக்கையில் அச்செய்தியை திருத்துவதுடன், அதே அளவு முக்கியமளித்து அச்செய்தியை பிரசுரிக்குமாறு வேண்டுவதுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் மேலும்
இச்செய்தி தொடர்பான உண்மை நிலவரத்தை நீங்கள் அறிந்துள்ள காரணத்தினால், அதற்கு எதிராக உங்கள் காரியாலயத்தின் தேர்தல் அதிகாரி அப்பத்திரிக்கைக்கு கருத்து வெளியிட்டிருந்தால், அவரின் கூற்றையும் திருத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இச்செய்தியில் குறிப்பிட்டவாறு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஈபிடிபியினால் செய்யப்படவில்லை என்பதை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உதயன் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இத்துடன் இணைத்துள்ளதுடன், நீங்கள் இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றும் நம்புகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|