தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019

தீவகப்பகுதி மட்டுமல்ல நாட்டின் எப்பகுதியிலும் முதலிட்டாளர்கள் அந்தந்த பிரதேசங்களினது மக்களினதும் நலன் சார்ந்து செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதுடன் புலம்பெயர் தேச முதலீட்டாளர்களும் அவ்வாறு தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூல அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்  தீவகத்தில் வேற்றுப்பிரதேச முதலிட்டாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் தரப்பு பாதிக்கப்படுவதாகவும் பேசப்படுகின்றறது கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கடந்த காலங்களில் இந்த அமைச்சில் என்ன நடந்ததோ எமக்கு அக்கறையில்லை. தற்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சக்கு நானே பொறுப்பாளி. அந்தவகையில் எனது அமைச்சில் அல்லது அதன் கட்டமைப்பில் எங்கும் ஊழல்களுக்கோ துஷ்பிரயோகங்களுக்கோ நான் இடமளிக்கப் போவதில்லை.

நான் மக்களிடம் தேர்தல் நேரத்தில் கோரியிருந்தேன் தென்னிலங்கை நிலைமைகளின் பிரகாரம் கோட்டபய ராஜபக்சவே வெற்றிபெறும் வேட்பாளராக இருக்கின்றார். என்னை நம்புங்கள். நான் செய்வேன் செய்விப்பேன் அவரை ஆதரியுங்கள் என்று. ஆனால் மக்கள் வதந்திகளை நம்பி நான் ஆதரிக்கக் கோரிய வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை.  

ஆனாலும் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியானார். அவரது அரசில் எனக்கும் ஒரு மிகப்பெரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை அவர் வழங்கியிருந்தார்.

ஆனால் அதை பெற்றுக்கொள்ள நான் விரும்பியிருக்கவில்லை. இந்நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் சமய தலைவர்கள் பொதுமக்கள் எமது கட்சி ஆதரவாளர்கள் என பலர் என்னை வற்புறுத்தியதற்கமையவே நான் இந்த அமைச்சை பொறுப்பேற்றேன்.  எனக்கு இன்று வழங்கப்பட்டுள்ள தேசிய ரீதியான அமைச்சானது எனது நல்லிணக்க அரசியலுக்காகவே ஜனாதிபதியாலும் பிரதமராலும் வழங்கப்பட்டது .

ஆனாலும் எனது மக்ககளின் நலன்களை முன்னிறுத்தி நாம் இந்த அமைச்சினூக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றேன். அந்தவகையில் மக்கள் நலன்களை முன்னிறுத்திய முதலிட்டாளர்களை உள்வாங்கி எமது பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்க நான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றார்.

Related posts:

நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்...
தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை...
நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகி...

ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...