அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் புத்தெழுச்சி பெறுகிறது கடற்றொழில் கூட்டுத்தாபனம்!

Wednesday, October 14th, 2020

கடந்த காலங்களில் நஸ்டத்தில் இயங்கி வந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வெற்றிகரமாக செயற்பட்டு வருவதனை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் கடற்றொழில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்ட போது,  இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 19 பிரதான விற்பனை கிளைகளில் பெரும்பாலானவை நஸ்டத்திலேயே இயங்கி வந்தன.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கமான வழிநடத்தல்களை உரிய முறையில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகாரிகளினால் செயற்படுத்தப்பட்டதன் விளைவாக தற்போது சுமார் 13 பிரதான விற்பனை நிலையங்கள் இலாபமீட்டும் நிலைக்கு மாறியுள்ளதுடன் 01 கிளையில் ஏற்படுகின்ற நஸ்டம் குறைக்ககப்பட்டுள்ளதுடன் 5 விற்பனை நிலையங்கள் மாத்திரமே தற்போது நஸ்டத்தில் இயங்கி வருவதாகவும் அவற்றையும் இலாபமீட்டும் நிலையங்களாக மாற்றவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிருஸாந்த ரத்தினவீர தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மொத்த மீன் விற்பனை 317 தொன்னாக இருந்த நிலையில் தற்போது 100 தொன்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முகாமைத்துவப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்படுன்றது. நாடளாவிய ரீதியில் மீன் விநியோகத்தினை மேலும் இலகுபடுத்துவதற்காக 05 லொறிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் இதுவரை 11 விற்பனை நிலையங்களும் புதிதாக திறக்கப்பட்டுள்ள நிலையில, கருவாடு இறக்குமதி தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தேசிய கருவாடு உற்பத்தியை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்வதற்கு கருவாடு தயாரிக்கும் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கும் அதற்குத் தேவையான இயந்திரமொன்றை 04 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக...
பல்கலையில் தமிழ் மொழி மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புவழங்கஏற்பாடுவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவட...

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவி...
புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...