யாழ் மாவட்டத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்திற்குள் வருகைதந்து நிர்க்கதியாக இருக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அனர்தவலயங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்ந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இன்றுமுதல் மீளவும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியும் என கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த ஒரு மாதகாதலமாக நாடுமுழுவதும் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்துவந்தது. இந்த நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குள் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டத்தவர்களும் தொழில் நிமிர்தமும் வைத்தியம் மற்றும் ஏனைய இதரபல தேவைகள் காரணமாகவும் வருகை தந்திருந்த நிலையில் மீளவும் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது நிர்க்கதி நிலையில் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில் நிர்க்கதி நிலையிலிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பில் தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைவிடுத்ததற்கு அமைய நான் கடந்த வாரம் அமைச்சரவையில் குறித்த பிரச்சினை தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் அது தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினரும் சூழ்நிலைகளை ஆராய்ந்து சாதகமான பதிலை தருவதாக கூறியிருந்தனர்.

நிலையில் தற்போது அரசு மற்றும் சுகாதாரத் தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து பிற மாவட்டங்களில் தத்தமது தேவைகள் கருதி சென்று மீளவும் யாழ்ப்பாணம் திரும்ப முடியாது நிர்க்கதியாக உள்ளவர்களை மீளவும் யாழ்ப்பாணம் அழைத்து செல்வதற்கான முயற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடர் வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் இதில் உள்ளடங்கப்படமாட்டார்கள் என்பதுடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மக்கள் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சன நெரிசல்களை ஏற்படுத்ததாவகையில் செயற்பட்டு குறித்த கொரோனா தொற்றை முற்று முழுதாக எமது பகுதிகளிலிருந்து ஒழித்து இயல்பு நிலையை முழுமையாக கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் சகல துறை சார் விடயங்கள் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்.மாவட்டத்தில் தங்கி உள்ளவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதிகளை பெற்று இன்றுமுதல் சுகாதாரத் தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!