இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் முல்லை மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 320 பேருக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் கடற்றொழில் மேம்பட்டால் பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் - டக்ளஸ் தேவானந்தா!
நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
|
|