உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 8ஆம் திகதி!

Thursday, June 29th, 2017

முன்னைநாள் அமைச்சரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் நாடாளுமன்றில் பேசப்படாத விடயத்தை திரு சுமந்திரன் அவர்கள் பேசியிருந்ததாக 07.11.2012 அன் றைய உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரித்ததன்மூலம், உதயன் பத்திரிகையின் பிரசுரிப்பாளரான “நியூ உதயன் பப்ளிக்கேஷன் பிறைவேற் லிமிட்டெட்” என்ற நிறுவனத்திற்கு எதிராக, குறித்த செய்தி தனக்கு மானபங்கத்தை  ஏற்படுத்தியதுடன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் தெரிவித்து குறித்த நிறுவனத்திடமிருந்து 500 மில்லியன் ரூபா தனக்கு நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனக்கோரி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் (29) யாழ். மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றையதினம் வழக்காளி திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீதிமன்றில் பிரசன்னமாகி இருந்ததுடன், அவரது சார்பில் ஆஜராகும் சிரேஸ்ட சட்டத்தரணி அப்துல் நஜீம் அவர்களின் சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிமன்றம், ஒருதலைப்பட்சமான வகையில் விசாரணைக்காக எடுத்தக்கொள்ளப்பட்டிருந்த இவ்வழக்கின் தீர்ப்பை டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வழங்குமென தெரிவித்து இவ்வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்தது.

இவ்வழக்கில் சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி அப்துல் நஜீம் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் M....
நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் -  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!
புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ஈ.பி.டி.பி அமைப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு...