நொதேன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது – அச்சம் கொள் வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023

யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நொதேண் பவர் அனல்மின் நிலையம் எனக்குத் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் கழிவு ஓயில் பிரச்சனையை ஏற்படுத்திய நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்படும் என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகின்றது.

நொதேன் பவர் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட கழிவு ஓயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக 20 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.

ஆனால் குறித்த நிதியை இன்னும் பலர் பெறாது இருக்கிறார்கள், அதற்குக் காரணம் நிதியை பெற்றுக் கொண்டால் குறித்த நிறுவனம் மீளச் செயற்படும் என்ற அச்சமே எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நொதேன் பவர் நிறுவனம் மீள இயங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டது உண்மை.

ஆனால் நான் உறுதியாக கூறுகிறேன், யாழில் எனக்கு தெரியாமல் குறித்த நிறுவனம் மீள செயல்பட முடியாது, அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...

மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
கொடிகாமம் - பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் - சபை...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...