இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 6th, 2022

ஐநா அமர்வுகளில் காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை கச்சதீவு திருவிழாவுக்கு தானும் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இன்று  ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில் –

நீண்ட இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும் நூறு நூறு பேராக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றேன் .

அத்துடன் கச்சதீவுக்கு நானும் செல்வதாக உள்ளேன். ஏனெனில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவற்காக நானும் செல்வதாக உள்ளேன் .

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய போராட்டங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த தொழிலாளர்களை விடுவிப்பது என்றும் மறுபுறத்தில் படகுகளை அரசு உடமையாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாகவும் முடிவெடுத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது

இதேவேளை ஐ.நா ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே. ஆனால் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் ” எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர...
மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...

நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...
வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான மானியம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...