இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, March 2nd, 2021

இரணைமடு அணைக்கட்டின் கீழ் நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார்.

குறித்த விவசாயிகள் தமக்கு நீர்ப்பாசண திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் தொடர்ந்தும் விவசாயம் செய்வதற்கு குறித்த திணைக்களம் தடை விதிப்பதாகவும், அந்தத் தடையை நீக்கித் சிறுபோகத்தைச் செய்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இன்று 02.03.2021 இரணைமடு வின்சன் வீதி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரிடம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்த விவசாயிகள் –

சுமார் 28 விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன்,நீர்ப்பாசண திணைக்களமானது இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டு பாதிக்கப்படுவதாக தெரிவித்து வேலி அமைத்துள்ளதாகவும் விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

எனினும் அணையின் பாதுகாப்புக்காக நீர்ப்பாசண திணைக்களம் அமைத்துள்ள வேலிப்பிரதேசத்தை தவிர்த்து எஞ்சிய நிலத்தில் தாம் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதியை பெற்றுத் தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

அத்துடன் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படும் தனது கரங்களை மக்களே பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், தொடர்ந்தும் தமிழ் மக்கள் தவறான தெரிவுகளைச் செய்து சுயநல அரசியல் தரப்புகளுக்குப் பின்னால் பயணிப்பார்களேயானால் அது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்இதனிடையே கிளிநொச்சி பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் கிராம பொது அமைப்பு பிரநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்போது பாரதிபுரம் கிராம மக்கள் அரசியல் ரீதியாக பலிவாங்கப்படுவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் குடி தண்ணீர் பிரச்சனை, வீட்டுத்திட்டப் பிரச்சனை மற்றும் தொழில்வாய்ப்பு பிரச்சனை என்று பல பிரச்சனைகளுடன் தாம் வாழ்ந்துவருவதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அந்த கோரிக்கைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் அல்ல என்றும் விரைவில் இப்பிரச்சனைகளுடன் தொடர்புபட்ட அதிகாரிகளையும் அழைத்துவந்து ஆராய்ந்து உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்தார்Related posts:

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமை...

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள்  அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாய...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...