அமைச்சர் டக்ளஸ் தலையீடு – கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!

Monday, July 25th, 2022

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டினையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது -!

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் மேற்கொண்ட பணிப்புறக்கனிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டதன் பயனாக அவரது தலையிட்டின் பின்னர் இன்று மாலையுடன் கைவிடப்பட்ட பணிப்புறக்கனிப்பு.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது அமைச்சர்யாதெனில் ..
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலையின் இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே யாழ் சாலை பணியாளர்கள் தமது பணிப்புறக்கனிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் இது தொடர்பில் இ.போ.ச வின் யாழ் தொழிற்சங்க நிர்வாகிகள் மேற்படி விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து அவர் உரிய தரப்பினருடன் இன்று காலை மேற்கொண்ட கலந்துரையாடலின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கும் நபர்கள் இன்று மதியம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நடவடிக்கையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் சாலை முகாமையாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மக்களின் இயல்பு நிலையை கருத்தில் எடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இன்று மாலையுடன் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்ட யாழ் சாலை ஊழியர்கள் போது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: