கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை – அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Saturday, June 11th, 2022

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைய, நாட்டிலுள்ள 22 மீன்பிடி துறைமுகங்களுக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் கொலன்னாவை, முத்துராஜவளை, சப்புகஸ்கந்த முதலான எரிபொருள் களஞ்சியங்களிலும், தங்களது பேருந்து டிப்போகளிலும் உள்ள எரிபொருளை விடவும், அதிக எரிபொருள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – .

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இறுதி எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை வந்தடையும். இந்த நிலையில், மேலும் 500 மில்லியன் கடனுக்கான அனுமதியை அவர்கள் வழங்கியுள்ளனர்.

அது தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதமளவில் அதனை இறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக  அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ...
பேலியகொட மீன் சந்தை - இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் - மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அ...
வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் ...