ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 9th, 2018

ஆணைக்குழுக்களை உருவாக்கி, அதற்கென உறுப்பினர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு என ஊதியங்கள் வழங்கப்படுகின்றபோது, வழங்கப்படுகின்ற ஊதியத்திற்கான உச்சப் பயனை இந்த நாட்டின் முன்னேற்றம் கருதி பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பயனில்லை எனில் மக்களது பணத்தைக் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் என்பது வீணானதொரு செலவினமாகும் என்றே கருத வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

ஏற்கனவே அரச சேவைகள் ஆணைக்குழுவின் கீழிருந்த  கணக்காய்வுப் பணிகள்  யாவும் 19வது அரசியல்யாப்பு திருத்தத்தின் அடிப்படையில், இந்த அரசின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்பட்டது.

என்றாலும், இன்றுவரையில் தேசிய கணக்காய்வு கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்படாமை காரணமாக இந்த ஆணைக்குழு வெள்ளை யானையாகவே இன்னமும் இருந்து வருகின்றது. எனவே, மேற்படி கட்டளைச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான விரைவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், மேற்படி கட்டளைச் சட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்த 53 பிரிவுகளில் 20 பிரிவுகள் நீக்கப்பட்ட நிலையிலேயே இக் கட்டளைச் சட்டமூலமானது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஒரு தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. எனவே, இதன் உண்மை தன்மை குறித்தும் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் - டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்க...
பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...
வாழைச்சேனை பல நாள் படகு மீன்பிடியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துர...