பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, December 21st, 2022

பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், சந்தை வளாகத்தின் அருகில் காணப்படுகின்ற வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தரிசு நிலத்தில் வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பது தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் சம்மந்தப்பட்ட தரிசு நிலத்தினை பார்வையிட்டதுடன், இணைந்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியுடன் மீனா சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். – 

இதவேளை

கடலுணவு ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக உற்பத்தி செலவுகள் அதிகரிப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள  கடலுணவுகளின் விலை அதிகரிப்பினை சமாளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினர்

இதனிடையே

ரீன் மீன் உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹரத், திலிப் வெதாராட்ச்சி, சாந்த பண்டார ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இதன்போது ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: