அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை – கடற்றொழில் – நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!

Wednesday, June 1st, 2022

நோராட் எனப்படும் நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான முகவரமைப்பின் நிதியுதவியுடன்  ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறைகளில், அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலில் முன்னெடுப்புக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான கலந்துரையாடல் அண்மையில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க தலைமையிலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜொனார்லி எஸ்கெண்டல் உட்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைய ஒழுங்கமைக்கப்பட் கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரித்தல், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் கடற்றொழில் முறைகளை மாற்றியமைத்தல், கடலுணவுகள் பழுதடைந்து விரயமாகுதலை குறைத்தல் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்...
மக்கள் நலச் செயற்பாடுகள் மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படும் - வேலணை பிரதேச ஆலோசனை கூட்டத்தி...