வவுனியாவில் நிலவிய நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020

வவுனியா வடக்கு, காஞ்சூரமோட்மை குடியேற்றத் திட்டத்திற்கு மின்சார இணைப்பை வழங்குவதில் காணப்பட்ட தடைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நீக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க ஆகியோருக்கிடையில் நேற்று (19.10.2020) இடம்பெற்ற சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டததையடுத்து தீர்வு காணபட்டுள்ளது.

அதேபோன்று, வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம் போன்ற பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயல், மேட்டு நிலங்களை விடுவித்தல் மற்றும் கிரவல், கருங்கல,; மணல் போன்றவை அகழப்படுவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு  இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் சி.பி.ரத்னாயக்காவினால், வன ஜீவராசிகள் மற்றம் வனப் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கு. திலீபன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.

Related posts:

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...