உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, December 4th, 2017

தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும்  தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக  குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் வாழும் ஏனைய இன சமூக மக்களோடு சரி நிகர் சமமாக வாழ விரும்பும் எமது மக்கள்…அதற்கு மாறாக இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படுகிறார்கள்.

ஆகவே எமது மக்கள்  சமவுரிமை சுதந்திரத்தை விரும்புகிறார்கள். தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் யாவும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. .அதை நான் மறுக்கவில்லை. ஆனாலும்இ.. முன்னெடுத்த முயற்சிகள் யாவும்இ இலட்சியங்களை கனவு கண்ட தமிழ் பேசும் மக்களின் கண்களுக்கு வெறும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு முயற்சிகளும் கானல் நீராகி ஏமாற்றங்களை தந்திருந்த போதுஇ அம்பு துளைத்த மான்களாக வதை பட்டு வலி பட்டு எமது மக்கள் அலைந்து திரிந்தார்கள்.

இன்று யுத்தம் இல்லை. ஆனாலும் எமது மக்கள் சுமந்து நின்ற யுத்தத்தின் வடுக்களுக்கு ஈடான நிரந்தர அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இருந்தும் உரிய முறையில் அது முன்னெடுக்கப்படவில்லை.

அனுபவங்களே அர்த்தமுள்ள படிப்பினைகள். உண்மையாகவே  தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை யாரும் புதிதாகக் காண விரும்பினால். இதுவரை கால அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தும் ஏன் தோல்வியில் முடிந்தன என்பதை முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவதை  இனியாவாது நிறுத்த வேண்டும்!… இந்த நாட்டில் அரசியல் யாப்பில் இருக்கும் அரசியல் நடைமுறைகளை ஆரம்பக் கட்டமாக முதலில் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

அரசியல் தீர்வு முயற்சிகள் யாவும் அசையமுடியாத தேராக அரசியல் சகதிக்குள்  புதைந்து நிற்கின்றன.  அதை இழுத்து வந்து இலட்சிய திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால் நடைமுறை யதார்த்த வழியில் சிந்திக்க வேண்டும்.

அதற்காக என்ன செய்ய வேண்டும்?… எங்கிருந்து தொடங்க வேண்டும்?… இந்த கேள்விகளுக்கு விடை கண்டு அர்த்த பூர்வமான செயல் வடிவத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

அரை குறைதீர்வு என்றும்.. பழுதான தீர்வு என்றும்  ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்றும் காலங்காலமாக கூறிக்கொண்டு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் வெறுமனே நிராகரித்து விட்டு  எமது மக்களுக்கு எந்த தீர்வை எவர்தான் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அரசியல் பேச்சு வார்த்தை என்று கூறிஇ அவ்வப்போது அழகழகான கோசங்களை உச்சரித்துஇ வெறும்  கானல் நீரை மட்டுமே  காட்டி எமது மக்களை  கால காலமாக ஏமாற்றிக்கொண்டிருகிறார்கள். அதைவிடவும் இருக்கின்ற வாய்ப்புகளில் இருந்து தொடங்கி இறுதி இலக்கு நோக்கி செல்ல எம்மை தவிர எந்த தலைமைகளும் முன்வரவில்லை.

நீண்ட காலமாக நான் சொல்லி வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனங்கள். நிறைந்தவை. தொலை தூர நோக்கு கொண்டவை. இதை அன்றே ஏற்றிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இந்த மண்ணில் சுதந்திர பிரஜைகளாக இன்று வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

அழிவுகள் நடந்திருக்காது…அவலங்கள் தொடர்ந்திருக்காது…

தமிழ் பேசும் மக்கள் தாம் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தை நடை முறையில் இதுவரை பெற்றிருப்பார்கள். ஆனாலும் அது இங்கு நடக்கவில்லை!

இது ஒரு தேசிய இனத்தின் ஏமாற்றம். இந்த நாட்டில் வாழும் ஒரு பூர்வீக குடிமக்களின் துயரம். இத்தைகைய எனது ஆழ்மன துயர்களில் இருந்துதான் நான் இந்த சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறேன்.

அடுத்த தேர்தலில் எப்படி வெல்வது என்ற தந்திரங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்கள் அரசியல் தீர்வின்றி அவலப்படும் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றும் தந்திரங்களை ஏன் தெரிந்து கொண்டிருக்கவில்லை?..

இனிமேலும் இந்த தேர்தல் தந்திரங்கள் எமது மக்களிடம் பலிக்காது. ஆகவே நடைமுறையில் இருக்கும் அதிகாரங்களை ஏணிப்படிகளாக கொண்டு இலக்கை எட்டும் எமது வழிமுறை நோக்கி வருமாறு  அழைப்பு விடுத்தவனாக விடைபெறுகின்றேன்.

Untitled-8 copy00

Related posts:

வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் - கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!
மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...