கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, May 7th, 2021

கிளிநொச்சி கரும்பு தோட்டத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது.

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் கரும்புப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த சுமார் 196 ஏக்கர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்பு பயிர்செய்கை கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் கரும்பு பயிர்செய்கை உட்பட உப பயிர்செய்கையை மேற்கொள்வதற்கு பல்வேறு சமூக அமைப்புக்கள் ஆர்வம் செலுத்தி வருவதுடன், அதுதொடர்பான கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் முன்வைத்துள்ளன. குறித்த  விடயத்தில் அவதானம் செலுத்திய மாவட்ட ஒருங்கிபை்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துலையாடி கரும்பு பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளிப்பதுடன் எஞ்சிய பகுதியில் ஏனைய உப பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கும், அதற்காக ஆர்வம் செலுத்துகின்ற அமைப்புக்களில் பொருத்தமானவற்றை தெரிவு செய்து பகிர்ந்தளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

Related posts:


குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகி...
எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...