மக்கள் நலச் செயற்பாடுகள் மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படும் – வேலணை பிரதேச ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 31st, 2022


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபையினர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களுடனான கூட்டம் இன்று கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கட்சியின் வேலணை பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் ஆலோசனை சபை உறுப்பினர்களினாலும், பிரதேச கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் உட்பட்ட கடற்றொழிலாளர்களினதும் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வேலணை பிரதேசத்தில் மக்கள் நலச் செயற்பாடுகளை மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கட்சியின் பிரதேச நிர்வாகக் கட்டமைப்பினை தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். – 31.12.2022

Related posts:

கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...
மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் –...
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...