நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019

தொழில் வாய்ப்புகளுக்காக வருகின்றவர்கள் மத்தியில், நுண் கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வழி தேடி வருகின்றவர்களிடம், சொந்த காணிகளை, நிலங்களை மீட்க வருகின்றவர்களிடம், சுய தொழில் முயற்சிகளுக்கு உதவி கேட்டு வருகின்றவர்களிடம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இழப்பீடுகள் கோரி வருகின்றவர்களிடம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துத் தாருங்கள் எனக்கோரி வருவோரிடம், கடல் தொழில், விவசாய செய்கைகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அகற்றித் தருமாறு கோரி வருபவர்களிடம், வீட்டு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி வருபவர்களிடம் போய் ‘புதிய அரசியல் யாப்பில் சமஸ்ரி மறைந்து கொண்டிருக்கிறது’ எனக் கூறுவது தான் இவர்களுக்கு வாக்களித்த எமது மக்களுக்கு இவர்கள் செய்கின்ற சேவையா எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண சபையை ஏற்று அதனை மக்கள் நலன்சாரா வெற்றுச் சபையாக நாசமடித்த இவர்கள் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட மாகாண சபைகளை மக்களின் பிரதிநிதிகளுடன் மீள உயிர் பெற வாய்ப்பளிக்கின்ற மாகாண சபை தேர்தலை பற்றி வாய் திறக்காது அரசியல் அதிகாரங்கள் பற்றி பிதற்றி வருவது எமது மக்களை ஏமாற்றுகின்ற செயல் அல்லவா.

எவ்விதமான அரசியல் அதிகாரங்கள் கிடைத்தாலும் அவற்றை மாகாண சபைகளின் ஊடாகத்தான் இந்த நாட்டின் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக செயல்படுத்த இயலும். அதற்கு மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்க வேண்டும். இதனை அவர்கள் மறந்து விட்டு மேடை இன்றி ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, மதங்களையும், சம்பிரதாயங்களையும், போலித் தேசியத்தையும், கட்சி நலன்களையும் மாத்திரமே பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதே அன்றி, இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கான அவதானிப்புகள் முன்வைக்கப்படுவதில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என்றார்.

Related posts:


புலம்பெயர் தமிழ் மக்களின் உற்பத்தி முயற்சிகளை எம் தாயக தேசமெங்கும் ஊக்குவிப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ்...
பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...