அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்றது தீர்வு!

Friday, December 22nd, 2023

பூநகரி ஜெயபுரம் மக்கள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பயனாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

பூநகரி ஜெயபுரம் பகுதிக்கு நேற்று மாலை (21.12.2023) கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்ற மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்த அமைச்சர், விடயங்களுடன் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சு உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மாற்றும் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உடனடியாக  நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை மேற்கொண்டார்.

மரமுந்திரிகை பண்ணை பகிர்ந்தளித்தல், விவசாயப் பயிர்ச்செய்கைக்கான காணி ஒதுக்கீடு, வைத்தியசாலைக்கு நிரந்தரமாக பணிக்கு அமர்த்தல்,  ஜெயபுரம் – கிளிநொச்சி பாதை புணரமைப்பு, வயற்காணிக்குரிய அனுமதி, வீடமைப்புத்திட்டம், கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு, புதிதாக திருமணமானோருக்கு காணி,  தற்போது பெய்யும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு  நஷ்டஈடு மற்றும் பாடசாலை ஒழுங்கைக்கு மின் இணைப்பு போன்ற கோரிக்கைகளை ஜெயபுரம் மக்கள் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அடிப்படைவாத தமிழ்க் கட்சிகளே எமது மக்களின் பின்னடைவு களுக்கு காரணம் - மூத்த எழுத்தாளர் தெணியான் சுட்...
அமைச்சர் டக்ளஸ் முல்லை விஜயம் - தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு, அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்ச...

தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை  உருவாக்குவோம் - கட்சியின் வடக்கு ...
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!