மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடியாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 17th, 2020



இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்களில் பெரும்பாலானவை வினைத்திறனான பராமரிப்பு இன்றி அவற்றின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிப்பதாகவும் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான நிலை தொடர்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் திட்டமிடப்பட்டுள்ள மீனவர் சமூக பெண்களுக்கான சமூக அபிவிருத்தி திட்டத்தினை உடனடியாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன் குறித்த திட்ட வரைபின் இறுதி வடிவத்தை தனக்கு வழங்கமாறும் தெரிவித்தார்.

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(16.01.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அண்மையில் தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது அவதானித்த விடயங்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் அவர்களினால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், கடந்த காலத்தில் சரியான தலைமைகளின் வழிநடத்தல் இல்லாமையினால் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் தற்போது மோசமான நிலையில் காணப்படுவதாகவும் ஊழியர்களின் ஒத்துழைப்ப கிடைக்கமாயின் மீண்டும் சிறந்ந நிலைக்கு கொண்டு வரமுடியும் என்பதுடன் அனைத்து ஊழியர்களுக்கும் அந்த பயன் கிடைப்பதற்கு தேவையான அனுமதியை தன்னால் அமைச்சரவையில் பெற்றுத்தர முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் ரஷpயா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர்கள் அதற்கு சாதகமான சமிக்கைகளை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்துக்ளை பகிர்ந்துகொண்ட அதிகாரிகள், வருடந்தோறும் தமக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதிளவு இல்லாமல் இருப்பதால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் நீர்மூழ்கி பணியாளர்களும் இல்லாமையினால் துறைமுகங்களில் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன எனவும் தெரிவித்தனர்.

இவை தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், குறித்த வெற்றிடங்கள் தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அதுதொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான அனுமதிகளை உடனடியாக பெறுத்தருவதாகவும் தெரிவித்தார்.

Related posts:


அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில...
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...
பிரமந்தனாறு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...