அடிப்படைவாத கல்வி முறையை இல்லாதொழிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் சிலர் கூறி வருகின்ற நிலையில் அதனை மறுக்கின்ற கருத்துக்களும் அரசாங்கத்தில் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இராணுவத் தளபதி கூட எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே ஒரு முக்கிய விடயம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றபோது அது தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் அறிவிப்பதற்கென முதலில் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டியத் தேவை இந்த அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.
அவ்வாறின்றி இத்தகைய முரண்பாட்டுக் கருத்துக்களை ஒவ்வொரு தரப்பினர் கூறுகின்றபோது அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பங்கரவாத அச்சுறுத்தல் நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றதா? அல்லது பயங்கரவாத அசு;சுறுத்தல் இருப்பதற்காக அவசர காலச் சட்டம் நீடிக்கப்படுகின்றதா? என்றொரு சந்தேகம் மக்களிடத்தே ஏற்படுகின்றது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எவ்வாறு தடுத்திருக்கலாம்? என்பது குறித்தே இப்போது விசாரணைகள்மு;னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் பல்வேறுவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த நாட்டின் பாடத் திட்டத்திலேயே தவறான கொள்கைகள் காணப்படுவதாகவும் ஒருவர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். அவரது கருத்துக்களைப் பார்க்கின்றபோது மதராஸ்ரா அடிப்படைவாதம் – பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் இட்டிருக்கின்றதோ? என்ற சந்தேகமும் உருவாகின்றது. அதனால் இந்த அடிப்படைவாத கல்வி முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
|
|