DO ஆசிரியர்கள் ஆசிரியர் நியமனத்தை நிரந்தரமாக்கக் கோரி போராடம்!

Monday, September 8th, 2025


பல்கலைக்கழகங்களில் கல்விகற்று பட்டதாரிகளாக வெளியேறிய நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றிருந்த நிலையில் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகின்ற, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக
தங்களை ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான  பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்றையதினம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

இன்நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.

இந்னிலையில் இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிகொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

குறிப்பாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்ட எம்மை படசாலையின் சதாரண நிலை சேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய துன்பம் நிகழ்ந்தேறிவருகின்றது.

எனவே எமது கோரிக்கைக்கு தீர்வை கோரி நாம் இன்று வடக்கின் ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

முன்பதாக யாழ் மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாட்ப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதாம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிடத்தக்கது

Related posts: