2025 இல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 25th, 2025

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.

இதே காலகட்டத்தில் மருத்துவமனையில் 6,700 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

000

Related posts: