வரும் 15 ஆம் திகதியுடன் உடன் சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் நிறைவு!
Wednesday, May 2nd, 2018
இவ்வாண்டுக்கான க. பொ. த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படாததால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு ...
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயதாச...
|
|
|


