2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று நாடாளுமன்றில்!
Thursday, December 5th, 2024
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இடைக்கால நியமக் கணக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் (06) நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டுமுதல் 4 மாதங்களுக்கு, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இந்த இடைக்கால நிலையான கணக்கு மூலம் ஒதுக்கப்படும்.
அதேவேளை, இடைக்கால நியமக் கணக்கைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பொருத்தமான பிரேரணைக்கு நவம்பர் 25 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
00
Related posts:
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் செல்கிறார் சசிகலா!
குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க நடவடிக்கை!
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி = எகிப்தில் இடம்பெற்ற அரச தலைவர்களுக்கு இடைய...
|
|
|


