உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்காது:  நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Monday, April 30th, 2018

உயர்த்தினாலும், உணவுப்பொருட்களின் விலைகளை உயர்த்த இடமளிக்கப்படாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அரசாங்கம் எரிவாயு விலையை உயர்த்தியுள்ள நிலையில் அதனை ஓரு காரணமாகக் கொண்டு சிற்றூண்டிச்சாலை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அநீதியான முறையில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த இடமளிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு குறித்த அமைச்சரவையின் உபகுழுவின் பரிந்துரைக்கு அமைய கடந்த 27ஆம் திகதி எரிவாயுவின் விலை 245 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிவாயுவின் விலை 110 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2014-2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சமையல் எரிவாயுவின் விலை குறைவாகவே காணப்படுகின்றது எனவும் எனவே, உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு இடமளிக்கப்படாது எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts: