டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி – தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023

டெங்கு நோயாளர்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்வது தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்துள்ளார்

மருந்து நிறுவனம் ஒன்றின் கோரிக்கைக்கு இணங்க, இது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வருவதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், மருந்து நிறுவனங்கள் டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் முயற்சித்த போதிலும், அதற்கான அனுமதியைப் பெற முடியவில்லை.

அத்துடன், இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,930 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன் டெங்கு நோய் வேகமாக பரவுவது குறையலாம் எனினும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்..

இதுவரை சுகாதார வைத்திய அதிகாரியின் நாற்பத்தெட்டு அலுவலகங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அ...
கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எ...
பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை – வெள...