1g.440mg கெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட சிறை – யாழ். மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Wednesday, May 13th, 2026
……..
1g.440mg கெரோயின் உடைமையில் வைத்திருந்த வழக்க்கொன்றின் நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் 1.44 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா அவர்கள் 13.05.2026 அன்று தீர்ப்பளித்தார்.
மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும்12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி திரு. கா. நசிகேதன் அவர்கள் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


