11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!
Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கைமுதலிடத்தில் - யுனிசெப் !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை!
உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!
|
|
|


