ஹெரோயினுடன் யாழ் நகரில் இளைஞன் கைது!
Saturday, January 11th, 2025
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியில் பங்காளர்களாக மாறுங்கள்: தொல்புரம் மக்களிடம் ஈ.பி.டி.பி. வேட...
மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட விவகாரம் - சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது உடன்படி...
யாழ்ப்பாணம் சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்!
|
|
|


