புனரமைக்கப்பட்ட கட்டுநாயக்க விமான ஓடுபாதை இன்று திறப்பு!

Thursday, April 6th, 2017

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள விமான ஓடுபாதை இன்று 06 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஓடுபாதை 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 1986 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இதற்கமைய 60 மீற்றர் அகலத்தைக் கொண்டிருந்த இந்த ஓடுபாதையானது தற்போது 75 மீற்றர் அகலம் கொண்டதாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. விஸ்தரிப்பின் பின்னர் ஏ -380ரக விமானங்களை இங்கே தரையிறக்கக்கூடியதாக இருக்குமென விமான நிலையம் மற்றும் விமானங்களின் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சிறி லங்கன் விமான சேவையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட யு.எல் 1162 ரக விமானமே நாளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் விமான ஓடுபாதையில் முதன் முதலில் தரையிறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பெண் தலைமைக் குடும்ப மாணவர் விலகலே அதிகம்  - புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டத...
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு - பலதரப்பும் கடும் எதிர்ப்பு...
அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் - எம்.பி.க்களுக்கு எதிராக நடவட...