ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு – டிஜிட்டல் பொருளாதார அமைச்சு!
Tuesday, June 3rd, 2025
இணையச் சேவை வழங்குநரான ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்குத் தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஸ்டார்லிங்க் இலங்கைக்கு வழங்கியவுடன், அதன் சேவைகள் இலங்கையில் செயற்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அங்கீகாரமளித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


