மீண்டும் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்!
Friday, December 29th, 2017
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விளக்கமளிப்பு நிகழ்வுஇடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்துக்கு யுத்தகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2 வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானம் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருவருட காலத்தில் இலங்கை அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம்விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றையதினம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.
Related posts:
வடக்கில் வரட்சியின் பாதிப்பு அதிகரிப்பு -- இடர் முகாமைத்துவ நிலையம்தெரிவிப்பு!
வடக்கில் மீன் ஏற்றுமதி கைத்தொழிற்சாலை வலயம்!
O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!
|
|
|
நகரசபையை எமது மக்களின் பேராதரவுடன் வென்றெடுப்போம் - ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சி...
20ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம் கவலையடையப்போவதில்லை - அமைச்ச...
நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை - நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில்...


