20ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம் கவலையடையப்போவதில்லை – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020

20ஆவது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்தின் நகல்வடிவிற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பீரிஸ், இதன் காரணமாக ஐக்கியமக்கள் சக்தி 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றம் செல்வது குறித்து கவலையடையப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்தின் நகல்வடிவத்தினை குழுநிலை விவாதத்தின் போது மாற்றத்துக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளதாக கருதவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்ற பலம் அரசாங்கத்துக்கு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: