வெளியானது பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர, பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள்,  பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி!  

Sunday, June 1st, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெறுபான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

000

Related posts: