வெளியானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்!

Thursday, September 4th, 2025


……
​பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

​பரீட்சை பெறுபேறுகள் கடந்த இரவு (செப்டம்பர் 03, 2025) வெளியிடப்பட்டன.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும்.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது

அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: