விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை – அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சுங்கம்!

Thursday, January 30th, 2025

அண்மையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை சுங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, சுங்கத்தினரால் சோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எந்தவொரு சரக்கு கொள்கலனுக்கு இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் போன்றவை நாட்டிற்குள் நுழைய வாய்ப்பில்லை எனவும், இந்த கொள்கலன்களை விடுவிப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு எதுவும் இல்லை என்றும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொருட்களை விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் பின்பற்றும் வழிமுறை, சோதனை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதத்திற்கு வழிவகுத்த காரணிகள் என்பன தொடர்பிலும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: