தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கட்டணம்?

Friday, January 13th, 2017

பெப்ரவரி 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதகவலறியும் சட்ட மூலமாக ஏதேனும் தகவல்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு கட்டணம் அறவிடுவதற்கு இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சுக்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் போது பணம் வசூலிக்கப்படுவது குறித்து தகவல் ஆணைக்குழு கலந்துரையாடியுள்ளது.  நேற்று மற்றும் நேற்று முன்தினம் தகவல் ஆணைக்குழு இது தொடர்பில் கலந்துரையாடியதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார்.

பெப்ரவரி 03ஆம் திகதி முதல் தகவலறியும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், அதற்குறிய விதிமுறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஏதேனும் தகவல்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு கட்டணம் அறவிடுவதற்கு இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதாயின் முதல் மூன்று பக்கங்களுக்கும் கட்டணங்கள் அறவிடுவதில்லை என்றும், 04வது பக்கத்தில் இருந்து 05 ரூபா வீதம் அறவிடுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்றும், மீண்டும் அந்தக் குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகவல்களை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்பதுடன், பொது மக்களுக்கு வசதியான முறையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தகவல் ஆணைக்குழு கூறியுள்ளது.

Right to Information act

Related posts: