வருமான வரி நிலுவை – தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, வரிகளை வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானம்!
Monday, October 7th, 2024
வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் 1,417 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும்.
எனவே, வரி செலுத்தாத நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
00
Related posts:
மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செய...
மோசடிகள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் !
தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை - கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
|
|
|
தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருநெல்வேலி மேற்கு ...
சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது - பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த...
நடத்துனர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுவதால் நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருமான இ...


