வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைகந்தனின் மஹாற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Monday, July 21st, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹாற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இவ் மஹோற்சவத்தினை முன்னிட்டு நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டலும், செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

கருவறையில் வீற்று இருக்கும் அலங்காரவேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.

காலை 08.30 மணி சுப நேரத்தில் தேவஸ்தான பிரதம குரு வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து மாட்டு வண்டி மூலமாக சென்று செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான களாஞ்சியும், மஹோற்சவ நாளிதழினையும் வழங்கிவைத்தனர். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

25 நாட்கள் இடம்பெறும் மஹோற்சவமானது எதிர்வரும் 29 ஆம் திகதி  கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 22.08.2025 அன்று கொடியிறக்கத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது..

00

Related posts: