வத்திராயனில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றையதினம் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் கஞ்சா மீட்கப்பட்டது. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!
வலுக்கட்டாயமாக அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டதால் ஈராக் சிரியா லிபியா லெபனான் போன்ற நாடுகளின் நிலையே உர...
அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!
|
|
|


